Refund Application Filed after Rectification of Defects pointed out in GST RFD - 03
is not Time Barred
BSNL v. Union of India [W.P. (C) No. 3550/2023], (2023:DHC:2482-DB) Delhi High Court Order followed.
A Blog to disseminate information about GST and Taxation in Tamil Language
Refund Application Filed after Rectification of Defects pointed out in GST RFD - 03
is not Time Barred
BSNL v. Union of India [W.P. (C) No. 3550/2023], (2023:DHC:2482-DB) Delhi High Court Order followed.
FY 2023-24 marks a milestone with total gross GST collection of Rs. 20.14 lakh crore exceeding Rs.20 lakh crore, a 11.7% increase compared to the previous year. The average monthly collection for this fiscal year stands at Rs.1.68 lakh crore, surpassing the previous year's average of Rs.1.5 lakh crore. GST revenue net of refunds as of March 2024 for the current fiscal year is Rs.18.01 lakh crore which is a growth of 13.4% over same period last year .
ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ( GST Tribunal) இல்லாத நிலையில் மேல்முறையீடுகளைத் தாக்கல் செய்வதற்கான வழிகாட்டுதல்களை, ஆணையர், கேரள மாநில ஜிஎஸ்டி( Commissioner, State GST Department, Government of Kerala) அவர்கள் ஜனவரி 11, 2024 ஆம் தேதியிட்ட சுற்றறிக்கை எண். 01/2024 இன் மூலம்(Click here for the CCT's Circular) , தெளிவுபடுத்தி உள்ளார்.
2017ஆம் ஆண்டு, CGST/SGST சட்டத்தின் பிரிவு 112, துணைப்பிரிவு (1)ன்படி, பிரிவு 107 அல்லது 108ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும், அத்தகைய உத்தரவுக்கு எதிராக மூன்று மாதங்களுக்குள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (GST Tribunal) மேல்முறையீடு (Appeal) செய்யலாம். ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் இன்னும் அமைக்கப்படாததால், சட்ட பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் மேல்முறையீடு அல்லது விண்ணப்பத்தை தாக்கல் செய்ய இயலாத நிலை உள்ளது.
எனவே, மேல்முறையீடு செய்வதில் உள்ள சிரமங்களை நீக்கும் வகையில், அரசு, அறிவிப்பு எஸ்.ஆர்.ஓ. எண். 1024/2019 தேதியிட்ட 31.12.2019 [கேரள மாநில சரக்கு மற்றும் சேவை வரி (பதினொன்றாவது சிரமங்களை நீக்குதல்) ஆணை 2019], மூலம் “ஆணைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விரும்பும் நபருக்கு" பிரிவு 112 இன் துணைப்பிரிவு (1) இல் கூறப்பட்ட , மூன்று மாத காலத்தின் தொடக்கமானது ;
(i) உத்தரவு தெரிவிக்கப்பட்ட தேதி; அல்லது
(ii) 109வது பிரிவின் கீழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்ட பிறகு அதன் தலைவர் பதவிக்கு வரும் தேதி;
இந்த இரண்டு தேதிகளில் எது பின்னர் வருகிறதோ, அது கருத்தில் கொள்ளப்படும்.
எனவே, தற்போதைய நிலவரப்படி, மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால வரம்பு, அதன் தலைவர் அல்லது மாநிலத் தலைவர் பதவிக்கு வரும் தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது.
இதற்கிடையில், முதல் மேல்முறையீட்டு அதிகாரியால் வழங்கப்பட்ட தீர்ப்பு (Order Passed in the First Appeal) வரி செலுத்துவோருக்கு எதிரானதாக இருக்கும் சந்தர்ப்பங்களில், வரி செலுத்துவோர் மேல்முறையீடு செய்ய எண்ணினாலும், காலக்கெடுவுக்குள் மேல்முறையீடு அல்லது விண்ணப்பத்தை தாக்கல் செய்ய இயலாத நிலை உள்ளது என வரி செலுத்துவோரிடமிருந்து பல்வேறு முறையீடுகள் வந்துள்ளன. பல மேல்முறையீட்டு அதிகாரிகளிடம் மேல்முறையீடு செய்த வழக்குகள், மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்படாததால் நிலுவையில் வைக்கப்பட்டிருப்பதும், மேல்முறையீட்டு ஆணைகளுக்கு எதிராக எந்தப் பரிகாரமும் கிடைக்காதது ஆணையர் அவர்களின் கவனத்திற்கு வந்து இந்த விவகாரம் விரிவாக ஆராயப்பட்டது.
சிக்கலைத் தெளிவுபடுத்துவதற்கும், புல அமைப்புகளில் (Field Formation) சட்டத்தின் விதிகளை செயல்படுத்துவதில் சீரான தன்மையை உறுதி செய்வதற்கும், Kerala SGST சட்டத்தின் பிரிவு 168 இல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, பின்வரும் தெளிவுபடுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன;
மேல்முறையீட்டு தீர்ப்பாயம் செயல்படாத சூழ்நிலையில், சட்டத்தின் மேற்கூறிய விதியை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் சிரமத்தை நீக்க,
மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கான கால வரம்பு, மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் பதவிக்கு வரும் தேதியிலிருந்து கணக்கிடப்படும். மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் பதவிக்கு வந்ததிலிருந்து மூன்று மாதங்களுக்குள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு மேல்முறையீடு செய்யலாம் என்று உத்தரவை பிறப்பிக்கும் போது மேல்முறையீட்டு ஆணையர்(First Appellate Authority) உத்தரவில் (Appeal Order)குறிப்பிடலாம் . அதன்படி, மேல்முறையீட்டு தீர்ப்பாயம் செயல்பட காத்திருக்காமல், நிலுவையில் உள்ள அனைத்து மேல்முறையீடுகளையும் மேன்முறையீட்டு அதிகாரிகள் விரைவாக தீர்க்கலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
மேல்முறையீட்டு உத்தரவின் விளைவாக, நிலுவைத் தொகையை மீட்டெடுப்பது (Recovery of Demand) தொடர்பாக, ஏதேனும் கோரிக்கை (Demand) இருந்தால், அத்தகைய சந்தர்ப்பங்களில் வரி செலுத்துவோர் DC/AC/STO முன் ஜனவரி 11, 2024 ஆம் தேதியிட்ட சுற்றறிக்கை எண். 01/2024 இல் உள்ள இணைப்பு-I (Annexure-I)இல் உள்ளபடி ஒரு அறிவிப்பைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட வழிகாட்டுதல்களை அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட வரி செலுத்துவோருக்கு விரைவில் தெரிவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வரி செலுத்துவோர் சேவைகளின் இணை ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையை செயல்படுத்துவதில் ஏதேனும் சிரமம் இருந்தால், கேரள மாநில வரி ஆணையர் அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.
ஜி எஸ் டி சட்டம் இந்தியா முழுமைக்கும் பொதுவானது என்பதால் இந்த நடைமுறையை மற்ற மாநில ஜி எஸ் டிஆணையர்களும், மத்திய ஜி எஸ் டி அதிகாரிகளும் பின்பற்றினால் வணிகர்களின் சிரமங்கள் குறைந்து அவர்களின் நலன் பாதுகாக்கபடும்.
பிற மாநிலகளில் உள்ள வணிகர்களும், வணிகர் நல அமைப்புகளும் கேரள அரசின் இந்த நடைமுறையை பின்பற்ற கோரிக்கை வைக்கலாம்.