As per GSTN Advisory dated 13-09-2023
அன்புள்ள வரி செலுத்துவோரின் கவனத்திற்கு ,
1. ரூபாய் 100 கோடிக்கும் அதிகமான ஆண்டு மொத்த விற்று முதல் Aggregate Annual Turnover (AATO) ஐக் கொண்ட வரி செலுத்துவோருக்கான மின்-விலைப்பட்டியல் IRP போர்டல்களில் விலைப்பட்டியல்களைப் பதிவதற்கான காலக்கெடுவை விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
2. சரியான நேரத்தில் இயங்குவதை(Compliance) உறுதி செய்வதற்காக, இந்த வகையைச் சேர்ந்த வரி செலுத்துவோர் 30 நாட்களுக்கு மேல் பழைய இன்வாய்ஸ்களைப் IRP போர்ட்டலில் பதிவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
3. ஐஆர்என் (IRN) உருவாக்கப்பட வேண்டிய அனைத்து ஆவண வகைகளுக்கும் (இன்வாய்ஸ்கள்/கிரெடிட் நோட்/டெபிட் குறிப்பு) இந்தக் கட்டுப்பாடு பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவும்.
4. உதாரணமாக, விலைப்பட்டியல் நவம்பர் 1, 2023 தேதியாக இருந்தால், அதை நவம்பர் 30, 2023க்குப் பிறகு பதிய முடியாது. எனவே, வரி செலுத்துவோர் புதிய காலக்கெடுவால் இன்வாய்ஸ்கள்/கிரெடிட் நோட்/டெபிட்நோட் வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள் பதிவு செய்வது அவசியம்.
5. AATO ரூபாய் 100 கோடிக்கும் குறைவாக உள்ள வரி செலுத்துவோர் மீது இதுபோன்ற கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை .
6. வரி செலுத்துவோர் தங்கள் அமைப்புகளில் உரிய மாற்றங்கள் செய்ய போதுமான நேரத்தை வழங்குவதற்காக, 1 நவம்பர் 2023 முதல் இதை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
Alt-F வணிக தீர்வுகள், புதுச்சேரி
Alt-F Business Solutions, Puducherry
No comments:
Post a Comment