About Me

My photo
Puducherry, UT of Puducherry, India
After putting in a total service of 36 years in Tamil Nadu and Puducherry Commercial Taxes Department retired from Service in 2022 as Deputy Commissioner (State Taxes) and started consultancy Services in the name of Alt-F Business Solutions.

Thursday 16 November 2023

சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் (GSTN), நவம்பர் 14, 2023 அன்று வெளியிடப்பட்ட ஆலோசனை [Advisory issued by GSTN on 14-11-2023 for ITC Reversal under CGST Rules 2017, Rule 37A]

 https://www.gst.gov.in/newsandupdates/read/613 GSTN Advisory on ITC Reversal before 30 November 2023 as per Rule 37A 


வரி செலுத்துவோர், மத்திய ஜிஎஸ்டி விதிகள், 2017 (CGST Rules 2017)  விதி எண் 37A (Rule 37A) இன் படி நவம்பர் 30, 2023க்குள் உள்ளீட்டு வரி வரவை (ITC) திருத்துமாறு  (ITC Reversal) சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் (GSTN),  நவம்பர் 14, 2023 அன்று வெளியிடப்பட்ட ஆலோசனையின் வழியாக, வணிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

வரி செலுத்துவோர் தங்களது GSTR-3B இல், சப்ளையர்களால் GSTR-1/IFF இல் தாக்கல் செய்யப்பட்ட  விலைப்பட்டியல் (Tax Invoice) அல்லது டெபிட் குறிப்பு  (Debit Note) மூலம் உள்ளீட்டு வரி வரவினை கோரி இருந்தால் (ITC claimed )  அத்தகைய சப்ளையர்களால் மேற்சொன்ன விலைப்பட்டியல் (Tax Invoice) அல்லது டெபிட் குறிப்புகளுக்கு   (Debit Notes) உரிய வரியானது, நிதியாண்டு முடிந்து வரும்  செப்டம்பர் 30 ஆம் தேதி வரை, குறிப்பிட்ட காலத்திற்கான படிவம் GSTR-3B-ல் அவர்களின் சப்ளையர், உரிய வரியை செலுத்தவில்லை எனில்,  உள்ளீட்டு வரி வரவினை திருத்தியமைக்க வேண்டும் (ITC shall be reversed).

 இந்த சட்டப்பூர்வ கடமையின் ஒரு பகுதியாக, அத்தகைய உள்ளீட்டு வரி வரவினை நிதியாண்டு முடிந்து வரும்  நவம்பர் 30 ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் தாங்கள் தாக்கல் செய்யும்  படிவம் GSTR-3B இல், மாற்றியமைக்க வேண்டும். வரி செலுத்துவோருக்கு வசதியாக, 2022-23 நிதியாண்டிற்கான CGST  விதி 37A இன்படி கணக்கில் திரும்பப்பெற வேண்டிய ஐடிசியின் அளவு (ITC Reversal Amount ), கணினி மூலம் கணக்கிடப்பட்டு, சம்பந்தப்பட்ட வரி செலுத்துவோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மின்னஞ்சல் (E-mail), வரி செலுத்துபவரின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு (Regd. E-mail ID) அனுப்பப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர் அதைக் கவனத்தில் கொள்ளுமாறும், அத்தகைய ITC, அவர்கள் கோரியிருந்தால், GSTR-3B இன் அட்டவணை 4(B)(2) இல் நவம்பர் 30, 2023க்கு முன்னர் CGST விதி 37Aன்படி மாற்றியமைக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் (Ensure ITC is Reversed as per Rule 37A)

அவ்வாறு, உள்ளீட்டு வரி வரவு திருத்தியமைக்கப்படவில்லை என்றால், பிரிவு 50ன் கீழ்  அந்தத் தொகையை வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும். அதன் பிறகு, அந்த வரிக் காலத்திற்கான GSTR-3B படிவத்தில் குறிப்பிட்ட சப்ளையர் விவரங்களை அளித்து வரியினை செலுத்தினால், அந்தத் தொகையை மீண்டும் பெறலாம்.

எனவே வணிகர்கள் அக்டோபர் மாத GSTR 3B தாக்கல் செய்யும் போது இந்த அறிவுறுத்தலை கவனத்தில் கொள்ளும்படி கோரப்படுகிறார்கள்.  

ஆல்ட்-எப் வணிக தீர்வுகள், புதுச்சேரி 

Alt-F Business Solutions, Puducherry

 

2 comments:

  1. பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள் அய்யா

    ReplyDelete