சிறப்பு நடவடிக்கையின் மூலம் 21,791 போலி ஜிஎஸ்டி பதிவுகள், ரூ.24,000 கோடி வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டது: “மத்திய நிதி அமைச்சர்“
புது தில்லி, டிசம்பர் 5 :
(பி.டி.ஐ):- ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு
எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன் அவர்கள், 21,791 போலி ஜிஎஸ்டி பதிவுகளையும், ரூ.24,000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்ததையும் ஜிஎஸ்டி அதிகாரிகள்
கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தார் .
நேர்மையாக வரி செலுத்துவோரின், நலன்களைப்
பாதுகாக்கவும், வரி செலுத்துவோருக்கு
மிகுந்த சிரமத்தைத் தவிர்க்கவும், அவ்வப்போது அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அழைப்பாணைகள் (summons) , சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்தல், வரி வரவினை முடக்குதல் (Blocking of Tax
Credit) போன்ற அதிகாரங்களைப்
பயன்படுத்துவதில் அதிகாரிகள் தகுந்த எச்சரிக்கையுடனும், அக்கறையுடனும்
செயல்படுமாறு மத்திய நிதியமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
2023ஆம் ஆண்டு, மே 16ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை நடந்த சிறப்பு
நடவடிக்கையின் மூலம், மொத்தம் 21,791 நிறுவனங்கள் போலி என கண்டறியப்பட்டு அவர்களின் ஜிஎஸ்டி பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது (மாநில வரி அதிகார வரம்பிற்கு உட்பட்ட 11,392 நிறுவனங்கள்
மற்றும் மத்திய வரி அதிகார வரம்பிற்கு உட்பட்ட 10,399 நிறுவனங்கள்) மற்றும் ரூ. 24,010 கோடி வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது (மாநில வரம்பிலுள்ள வணிகர்கள் – ரூ 8,805/- கோடி, மத்திய வரம்பிலுள்ள வணிகர்கள் - ரூ.15,205/-கோடி).
மேலும், பதிவு செய்யப்பட்ட
நபரின் வங்கிக் கணக்கு, பெயர் மற்றும் PAN
பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட்ட 30 நாட்களுக்குள்
அல்லது GSTR - 1 அறிக்கையை
தாக்கல் செய்வதற்கு முன் ( எது முந்தையதோ) சமர்ப்பிக்கப்பட
வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் சரியான வங்கிக் கணக்குகளின் விவரங்களை வழங்காத நிறுவனங்களின் பதிவு, கணினியால் தானாகவே முடக்கப்படும். ஆயினும், பின்னர் இந்த விதிமுறைகளை நிறைவு செய்யும் பட்சத்தில், பதிவு தானாகவே கணினியால்
திரும்ப செயலுக்கு கொண்டுவரப்படும்.
ஆல்ட்-எப் வணிகத் தீர்வுகள், புதுச்சேரி.
Alt-F
Business Solutions, Puducherry.
Very informative message sir
ReplyDeleteThanks. Continue to encourage.
ReplyDelete