ஜிஎஸ்டி இணையதளத்தின் (gst.gov.in) பாதுகாப்பை வலுப்படுத்தும் பொருட்டு, இரண்டு கட்ட அங்கீகாரத்தை (2 Factor Authorisation)ஐ GSTN அறிமுகப்படுத்துகிறது. பயனர் பெயர் (User ID) மற்றும் கடவுச்சொல்லுடன் (Password), உள் நுழைவதற்கு (Login) 2வது அங்கீகாரமாக OTP (One Time Password) கட்டாயமாக்கப்படுகிறது. வரி செலுத்துபவர், இணையதளதிற்குள் நுழைய தாங்கள் பொதுவாக பயன் படுத்தும் கணினி அதாவது டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் அல்லது உலாவி (Browser) மற்றும் இருப்பிடத்தை (Location) மாற்றினால் மட்டுமே 2வது அங்கீகாரமாக இந்த OTP கேட்கப்படும்.
தற்பொழுது அரியானா மாநிலத்தில் இதற்கான சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு, தடையின்றி செயல்படுகிறது. அடுத்தகட்டமாக இது, பஞ்சாப், சண்டிகர், உத்தரகண்ட், ராஜஸ்தான் மற்றும் டெல்லி முதலிய மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்படும். அதற்கு அடுத்த கட்டமாக இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த 2வது அங்கீகார OTP முதன்மை அங்கீகரிக்கப்பட்ட நபரின் (Primary Authorised Person) "கைபேசி எண் (Mobile No.) மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு (e-mail ID) அனுப்பப்படும்.
எனவே, வரி செலுத்துவோர், தடையின்றி OTP தகவல்களைப் பெறுவதற்காக ஜிஎஸ்டி இணயதளத்தில் (gst.gov.in) தங்கள் மின்னஞ்சல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நபரின் கைபேசி எண்ணை புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
டிசம்பர் 1, 2023 முதல் இத்திட்டம் நடைமுறை படுத்தப்படுகிறது.
03-12-2023
ஆல்ட்-எப் வணிக தீர்வுகள், புதுச்சேரி
Alt-F Business Solutions, Puducherry.
No comments:
Post a Comment