இந்திய நிதி அமைச்சகம் டிசம்பர் 17,
ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில், ஏப்ரல் 2023 வரையிலான
கடந்த 5 ஆண்டுகளில், ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை
சுமார் 1.13 கோடியாக ( 65 சதவீதம்) உயர்ந்துள்ளது
என்று தெரிவித்துள்ளது. வரி செலுத்துவோர்
எண்ணிக்கையும், ஏப்ரல் 2018 இல் 1.06
கோடியாக இருந்த நிலையில், ஏப்ரல் 2023 இல் 1.40
கோடியாக அதிகரித்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நவம்பர் மாத மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ஆறாவது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டில் 90 சதவீத வரி செலுத்துவோர் மாதத்தின் இறுதிக்குள் GSTR – 3B படிவத்தை தாக்கல் செய்கிறார்கள், இது 2017-18 ல் 68 சதவீதமாக இருந்தது. ஏப்ரல் 2023 நிலவரப்படி GSTR-3B தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 1.13 கோடி பேர், இது 2018 ஏப்ரலில் 72.49 லட்சமாக இருந்தது.
"ஜிஎஸ்டி விதிகள் மற்றும் நடைமுறைகளை எளிமையாக்கியதன் மூலம், தகுதியான வரி செலுத்துவோர், மாத இறுதிக்குள், ரிட்டர்ன் தாக்கல் செய்யும் சதவீதம் அதிகரித்துள்ளது" என்று சமூக ஊடக தளமான X இல் (முன்னர் ட்விட்டர் என அழைக்கப்பட்டது) நிதி அமைச்சகம் பதிவிட்டுள்ளது.
ஆலட்-எப் வணிகத் தீர்வுகள், புதுச்சேரி
Alt-F
Business Solutions, Puducherry.
Yes Sir.. Neatly presented article
ReplyDeleteThanks for your compliments. Continue to support for writing more articles.
Delete