Instruction No. 05/2023-GST dated 13-12-2023 of
Central Board of Indirect Taxes and Customs, GST Policy Wing.
நார்தர்ன் ஆப்பரேட்டிங் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் (NOS) (Civil Appeal No. 2289 - 2293 of 2021)
தொடர்பான வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், சிஜிஎஸ்டி சட்டம், பிரிவு 74 (1) ஐ பயன் படுத்துவது குறித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) அறிவுறுத்தல் ஒன்றை (Instruction No. 05/2023-GST dated 13-12-2023) மூலம் வழங்கியுள்ளது.
மேற்கண்ட அறிவுறுத்தலில், குறிப்பாக சிஜிஎஸ்டி சட்டம், பிரிவு 74 (1) ஐ பயன் படுத்துவது குறித்து துறையிலுள்ள அதிகாரிகளுக்கு தெளிவான அறிவுறுதல்களை வழங்கியுள்ளது.
"(1) மோசடி (fraud) அல்லது வேண்டுமென்றே-தவறான அறிக்கை (wilful misstatement) அல்லது உண்மைகளை மறைத்தல் (suppression of facts) மூலமாக எந்த வரியும் செலுத்தப்படவில்லை அல்லது குறைவாக செலுத்தப்பட்டுள்ளது அல்லது தவறுதலாகத் திருப்பியளிக்கப்பட்டுள்ளது அல்லது உள்ளீட்டு வரி வரவினை தவறாகப் பெறப்பட்டிருக்கிறது அல்லது உபயோகபடுத்தப்பட்டு இருக்கிறது, என்பது உரிய அதிகாரிக்கு (proper officer) தெரியவந்தால் அவர் அவ்வாறு தவறு இழைத்த நபருக்கு, நோட்டீஸ் (SCN) ஒன்றினை வழங்கி, அவரிடமிருந்து நோட்டீசில் குறிப்பிட்ட தொகை, அதற்க்கு ஈடான தண்டத் தொகை மற்றும் பிரிவு 50 இன் கீழ் வட்டி முதலியனவற்றை ஏன் வசூலிக்கக்கூடாது என விளக்கம் கேட்க வேண்டும்.”
மேற்கண்ட வாசகத்திலிருந்து CGST சட்டத்தின் பிரிவு 74 (1) ஐ, வணிகர் மோசடியாக அல்லது தவறான தாகவல்களைத் தந்து அல்லது உண்மைகளை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருந்தால் மட்டுமே பயன்படுத்தமுடியும் என்பது புலனாகும். வணிகர்கள் GST ஐ செலுத்தாத காரணத்திற்காக பிரிவு 74 (1) ஐ பயன்படுத்த முடியாது.
எனவே, மோசடி அல்லது வேண்டுமென்றே-தவறான அறிக்கை அல்லது உண்மைகளை மறைத்தல் மூலமாக வரியானது அரசுக்கு முறையாக செலுத்தவில்லை என்று விசாரணையில் உரிய சான்றுகள் மூலம் தெரியவந்தால் மட்டுமே GST சட்டத்தின் பிரிவு 74 (1) ஐ பயன் படுத்தமுடியும். அத்தகைய சான்றுகளை நோட்டீசின் ஒரு அங்கமாக இணைக்கவேண்டும்.
இவ்வாறு அந்த அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது
ஆல்ட்-எப் வணிகத் தீர்வுகள், புதுச்சேரி .
Alt-F Business Solutions,Puducherry.
Great news
ReplyDeleteThanks. Continue to encourage, to write more.
DeleteGood Service and precise analysis. Great Job.
ReplyDelete